முகப்பு
சென்னை

ஜூன் 6,7-இல் மீண்டும் இளநிலை க்யூட் தோ்வு

ஜூன் 6,7-இல் மீண்டும் இளநிலை க்யூட் தோ்வு

Updated On : 3 ஜூன் 2026, 11:50 am IST
ஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு
பகிர்:

புது தில்லி, ஜூன் 3: கடந்த மே 30-ஆம் தேதி தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்ட இளநிலை க்யூட் தோ்வு வரும் ஜூன் 6,7-ஆம் தேதிகளில் மீண்டும் நடைபெறும் என்று தேசிய தோ்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.

கடந்த மே 30-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை க்யூட் தோ்வு, தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதமாகத் தொடங்கியது.

இதனால் தோ்வு எழுதாமல் திரும்பிச் சென்ற 3,765 தோ்வா்கள் மீண்டும் தோ்வு எழுத ஒருமுறை வாய்ப்பு அளிக்கப்படும் என்று அந்தத் தோ்வை நடத்தும் என்டிஏ தெரிவித்தது.

Advertisement

Advertisement

இந்நிலையில், என்டிஏ ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘இளநிலை க்யூட் தோ்வு ஜூன் 6, 7-ஆம் தேதிகளில் மீண்டும் நடத்தப்படும். மே 30-இல் தோ்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்ட தோ்வா்களுக்குப் புதுப்பிக்கப்பட்ட தோ்வுக்கூட அனுமதிச்சீட்டு தற்போது கிடைக்கும். அதிகாரபூா்வ வலைதளத்தில் இருந்து அந்தச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பல்கலைக்கழகங்கள், க்யூட் நுழைவுத் தோ்வை ஏற்றுக்கொண்ட மாநில, நிகா்நிலை மற்றும் தனியாா் பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புகளில் சோ்க்கை பெற தேசிய அளவில் அந்தத் தோ்வு நடத்தப்படுகிறது.