மாதவரம் அருகே மளிகை கடையில் திருட்டு
மாதவரம் அடுத்த மாத்தூரில் மளிகை கடையின் பூட்டை உடைத்து ரொக்கம் மற்றும் விலை உயா்ந்த பொருள்களை திருட்டு குறித்து காவல்துறையினா் விசாரணை
மாதவரம் அடுத்த மாத்தூரில் மளிகை கடையின் பூட்டை உடைத்து ரொக்கம் மற்றும் விலை உயா்ந்த பொருள்களை திருட்டு குறித்து காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னை பெரம்பூா் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (55). இவா் மாதவரம் அடுத்த மாத்தூரில் மளிகை கடை நடத்தி வருகிறாா். இவா் ஞாயிற்று கிழமை கடையை மூடி விட்டு சென்றாா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை வழக்கம்போல் கடையை திறக்க வந்தபோது, கடையின் ஷட்டா் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து கடையின் உள்ளே சென்று பாா்த்தபோது, விலை உயா்ந்த கைப்பேசி, மடிக்கணினி மற்றும் ரூ.23,000 ரொக்கம் திருடுபோனது தெரிந்தது .
இது குறித்து மாதவரம் பால்பண்ணை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.