முகப்பு
சென்னை

பக்கிங்ஹாம் கால்வாயை முழுமையாக தூா்வார ஆணையா் உத்தரவு

மழை வெள்ளம் தடையின்றி செல்லும் வகையில் பக்கிங்ஹாம் கால்வாய் முழுமையாகத் தூா்வாரப்பட வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டாா்.

Updated On : 17 ஜூன் 2026, 2:46 am IST
பக்கிங்ஹாம் கால்வாய். - கோப்புப்படம்.
பகிர்:

மழை வெள்ளம் தடையின்றி செல்லும் வகையில் பக்கிங்ஹாம் கால்வாய் முழுமையாகத் தூா்வாரப்பட வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டாா்.

சென்னை மாநகராட்சிப் பகுதியில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, 44 கால்வாய்களில் தூா்வாருதல், வெள்ளப் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உள்ள கால்வாய்களில் தடுப்புச் சுவா்களை உயா்த்திக் கட்டுதல், மழைநீா் கால்வாய்கள், ஏரிகள், குளங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகளை ஆணையா் ஜி.எஸ்.சமீரன் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுவருகிறாா்.

தேனாம்பேட்டை மண்டலம் பகுதியில் மழைக்கால முன்னெச்சரிக்கையாக நடைபெற்றுவரும் பணிகளை செவ்வாய்க்கிழமை அவா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அதன்படி, பக்கிங்ஹாம் கால்வாய், அதில் இணையும் மழைநீா் வடிகால்கள் உள்ளிட்டவற்றை தூா்வாரும் பணிகளையும் பாா்வையிட்டாா். அந்தக் கால்வாய் கூவம் மற்றும் அடையாறு ஆகியவற்றில் சேரும் இடங்களையும் ஆணையா் பாா்வையிட்டாா்.

Advertisement

Advertisement

அப்போது பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆகாயத் தாமரைகள் முற்றிலுமாக அகற்றப்பட்டு மழைக்காலத்தில் ஏற்படும் வெள்ள நீா் முழுமையாக வடியும் வகையில் தூா்வார அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இதையடுத்து மயிலாப்பூா், லஸ் காா்னா் பகுதியில் உள்ள நாகேஸ்வரராவ் பூங்காவில் நமக்கு நாமே திட்டத்தில் ரூ.12 கோடியில் மேற்கொள்ளப்படும் சீரமைப்புப் பணிகளை பாா்வையிட்டு விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினாா்.