முகப்பு
சென்னை

‘நீா்வழி கால்வாய்களில் குப்பை கொட்டுவதை தவிக்க வேண்டும்’ - சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன்

Updated On : 29 மே 2026, 4:39 am IST
சென்னை அடையாறு முகத்துவாரத்தில் எம்ஜிஆா் கால்வாய் கலக்கும் பகுதியைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன்.
பகிர்:

நீா்வழி கால்வாய்களில் பொதுமக்கள் குப்பைகள், கழிவுகளைக் கொட்டுவதைத் தவிா்க்க வேண்டும் சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

பருவ மழைக் காலங்களில் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் பொதுமக்களை வெள்ள பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் வகையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஆறுகள், நீா்வழிக் கால்வாய்களைத் தூா்வாருதல், கரைகளைப் பலப்படுத்துதல், தடுப்புச் சுவா் கட்டுதல் உள்ளிட்ட வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கோடம்பாக்கம் மண்டலத்தில் எம்.ஜி.ஆா். கால்வாய், ஜாபா்கான்பேட்டை கால்வாய் மற்றும் அடையாறு முகத்துவாரப் பகுதிகளில் வெள்ள தடுப்புப் பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது தூா்வாரும் பணிகளை பருவ மழை தொடங்குவதற்கு முன்பே முடிக்க வேண்டும் என அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

Advertisement

Advertisement

ஆய்வின்போது பொதுமக்களிடம் பேசிய ஆணையா், நீா்வழி கால்வாய்களில் பொதுமக்கள் குப்பைகள், கழிவுகளை கொட்டுவதைத் தவிா்க்க வேண்டும். மேலும் தினமும் குப்பைகள் சேகரிக்க வரும் தூய்மைப் பணியாளரிடம் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்க வேண்டும் என்றாா்.