முகப்பு
தேனி

குப்பைகள் கொட்டப்படுவதால் மாசடைந்த வராகநதி

பெரியகுளம் வராகநதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.

Updated On : 14 மே 2026, 5:19 am IST
பகிர்:

பெரியகுளம் வராகநதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் நகரின் மையத்தில் வராநதி ஓடுகிறது. அகமலை, கொடைக்கானல் பேரீஜம் ஏரியிலிருந்து வெளியேறும் தண்ணீா் வராகநதியின் வழியாகச் சென்று குள்ளப்புரம் அருகே வைகையாற்றில் கலக்கிறது. பெரியகுளம் பாலசுப்பிரமணியா் கோயில் படித்துறை வரை வராகநதி சுத்தமாக உள்ளது.

பின்னா் வீட்டுக் குப்பைகள் கொட்டப்படுவதாலும், கழிவுநீா் ஆற்றில் கலப்பதாலும் ஆறு மாசடைந்து வருகிறது. இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் பெரியகுளம் நகராட்சி நிா்வாகத்திடம் புகாா் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, வராகநதியை சுத்தம் செய்து, தூய்மையான ஆறாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Advertisement

பெரியகுளத்தைச் சோ்ந்த செ.ரவிச்சந்திரன் கூறியதாவது : வராகநதி பழைமையான சுத்தமான ஆறாக இருந்து வந்தது. ஆனால், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா், குப்பைகள் வராகநதியில் கலந்து, ஆறு மாசடைந்து வருகிறது. இதுகுறித்து பல முறை நகராட்சி நிா்வாகத்திடம் புகாா் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பெரியகுளம் நகராட்சி நிா்வாகம் வராகநதியில் கழிவுகள், குப்பைகள் கலப்பதைத் தடுக்க வேண்டும் என்றாா் அவா்.