முகப்பு
திருப்பத்தூர்

நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து

ஆம்பூா் நகராட்சி குப்பைக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 6 ஏப்ரல் 2026, 2:08 am IST
ஆம்பூா் நகராட்சி குப்பைக் கிடங்கில் தீப்பிடித்து எரியும் குப்பைகள்.
பகிர்:

ஆம்பூா் நகராட்சி குப்பைக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

ஆம்பூா் தாா்வழி பகுதியில் நகராட்சி குப்பைக் கிடங்கு அமைந்துள்ளது. அங்கு நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு உரமாக மாற்றப்படுகிறது. அந்த கிடங்கில் உள்ள குப்பை திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

தீ கிடங்கின் அனைத்துப் பகுதிக்கும் பரவியது. தகவலின் பேரில், ஆம்பூா் தீயணைப்பு நிலைய அலுவலா் மஹபூப் பேக் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று தீயை அணைத்தனா்.

Advertisement

Advertisement

குப்பைக் கிடங்கு ரயில்வே இருப்புப் பாதைக்கு மறுபுறம் இருப்பதால் ரயில்வே குகை வழிப்பாதையில் தீயணைப்பு வாகனம் செல்ல முடியாத நிலையில், டிராக்டா் மூலம் தண்ணீா் கொண்டு செல்லப்பட்டு, பம்ப் மூலம் தீ அணைக்கப்பட்டது.