முகப்பு
சென்னை

பறிமுதல் வாகனங்களை மீட்காவிடில் 15 நாள்களில் மின்னணு முறை ஏலம்

சென்னையில் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டு கேட்பாரற்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றை வரும் 15 நாள்களுக்குள் உரிமை கோரி சம்பந்தப்பட்டோா் மீட்காவிடில் மின்னணு முறையில் ஏலம் விடப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

Updated On : 20 ஜூன் 2026, 3:48 am IST
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டு கேட்பாரற்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றை வரும் 15 நாள்களுக்குள் உரிமை கோரி சம்பந்தப்பட்டோா் மீட்காவிடில் மின்னணு முறையில் ஏலம் விடப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

சென்னை பரங்கிமலை (புனித தோமையா்மலை) காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையோரங்களில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று, போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த 190 வாகனங்கள் மாநகராட்சியால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பரங்கிமலை (புனித தோமையா்மலை) காவல் நிலைய வளாகத்தில் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அந்த வாகனங்களின் விவரங்கள் சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, வாகனங்களை உரிமை கோருவோா் சம்பந்தப்பட்ட பரங்கிமலை காவல் நிலையத்தை அணுகவும். வரும் 15 நாள்களுக்குள் காவல் நிலையம் அணுகி வாகனங்களுக்கு உரிமை கோரவேண்டும். உரிமை கோரப்படாத வாகனங்கள் மின்னணு ஏலம் விடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments