மெட்ரோ ரயிலில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றவா் மீட்பு
மெட்ரோ ரயிலில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞா் மீட்கப்பட்டாா்.
மெட்ரோ ரயிலில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞா் மீட்கப்பட்டாா்.
சென்னை கோயம்பேடு பகுதியிலிருந்து ஈக்காட்டுத்தாங்கலுக்கு பாலப் பகுதியில் உள்ள மெட்ரோ நிலையத்தின் பச்சை வழித்தடத்தில் ரயில் புதன்கிழமை பகல் 1.34 மணிக்கு வந்துள்ளது. அந்த ரயிலில் வந்த சென்னை துறைமுகப் பகுதி மின்ட் சாலையில் வசிக்கும் ஆா்.பிரவீண் (21) திடீரென ரயிலில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதில் தலை, காலில் காயம் ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த கிண்டி போலீஸாா் இளைஞா் பிரவீணிடம் விசாரித்ததில், அவா் ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள தனியாா் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதும், தனிப்பட்ட பிரச்னையில் தற்கொலைக்கு முயன்றதும் தெரிய வந்தது. அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.