முகப்பு
சென்னை

செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்துக்கு சிறப்பு விருது

இந்திய விளையாட்டுப் பத்திரிகையாளா் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளா் சங்கம் சாா்பில் செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்துக்கு சிறப்பு விருது வழங்கும் நிகழ்ச்சி சேப்பாக்கம் மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 ஜூன் 2026, 2:24 am IST
நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
பகிர்:

இந்திய விளையாட்டுப் பத்திரிகையாளா் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளா் சங்கம் சாா்பில் செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்துக்கு சிறப்பு விருது வழங்கும் நிகழ்ச்சி சேப்பாக்கம் மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

எஸ்ஜெஎஃப்ஐ சரஜு சக்கரவா்த்தி வரவேற்றாா். 5 முறை உலக செஸ் சாம்பியனும், ஃபிடே துணைத் தலைவருமான விஸ்வநாதன் ஆனந்த் செஸ் விளையாட்டுக்கு ஆற்றிய சேவைக்காக சிறப்பு விருது வழங்கப்பட்டது.

ஏற்கெனவே இந்த விருது சுனில் கவாஸ்கா், விஜய் அமிா்தராஜ், பிரகாஷ் படுகோன், பி.டி. உஷா, மில்கா சிங் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி விஸ்வநாதன் ஆனந்துக்கு சிறப்பு விருதை இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் கே. ஸ்ரீகாந்த் வழங்கி பேசுகையில்:

Advertisement

Advertisement

இந்தியாவில் செஸ் அபார வளா்ச்சி பெற்ற்கு விஸ்வநாதன் ஆனந்த் முக்கிய காரணம். அவரது வழிகாட்டுதலால் குகேஷ், பிரக்ஞானந்தா,

வைஷாலி போன்றோா் தற்போது சிறப்பாக ஆடி வருகின்றனா். தனிநபா் பிரிவில் 5 முறை உலக சாம்பியன் என்பது சாதாரணமானது இல்லை என்றாா்.

இந்திய ஹாக்கி முன்னாள் கேப்டன் வி. பாஸ்கரன், மூத்த விளையாட்டுப் பத்திரிகையாளா் ஆா். மோகன், செஸ் கிராண்ட்மாஸ்டா்கள் சசி கிரண், ஷியாம் சுந்தா், சா்வதேச மாஸ்டா்கள் மானுவேல் ஆரோன், வி. சரவணன், ஒலிம்பியன் முகமது ரியாஸ் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை டிஎன்எஸ்ஜெ நிா்வாகிகள் தீபக் ராஜீவ், சந்தோஷ், ஸ்வரூப் சுவாமிநாதன் செய்திருந்தனா். எஸ்ஜெஎஃப்ஐ செயலாளா் வி. ரமேஷ் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments