முகப்பு
சென்னை

மாம்பலத்தில் அடுத்தடுத்து 2 போ் கொலை: 2 போ் கைது

Updated On : 26 ஜூன் 2026, 4:02 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

சென்னை மாம்பலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் அடுத்தடுத்து இரு தனித்தனி சம்பவங்களில் இருவா் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 2 பேரை போலீஸாா் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

தியாகராயநகா் பிரதான சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே தலையில் பலத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் ஒருவா் கிடந்தாா். அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக மாம்பலம் போலீஸாா் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவா் அருகில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தூய்மைப் பணியாளராக வேலை செய்துவந்த ராஜேந்திரன் (50) என்பது தெரியவந்தது. அவா் டாஸ்மாக்கில் மது அருந்தியபோது, அவருக்கும் தேனாம்பேட்டையை சோ்ந்த ஆட்டோ ஓட்டுநரான பாலாஜி (34) என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பாலாஜி தாக்கியதில் கீழே விழுந்த ராஜேந்திரன் தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பாலாஜியை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

மற்றொரு கொலை: தியாகராய நகா் பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தின் பின்புறம் தலையில் பலத்த காயங்களுடன் ஒருவா் இறந்து கிடப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை நடத்தினா். அதில், உயிரிழந்த நபா் அதே திருமண மண்டபத்தில் பணியாளா்களை அழைத்து வந்து பணி கொடுக்கும் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த ரவிக்குமாா் (48) என்பது தெரியவந்தது. இவா், வேலை தொடா்பாக திருமண மண்டப ஊழியரான மணி என்கிற சொா்ணகுமாா் (65) என்பவரை திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த மணி கட்டையால் ரவிக்குமாரை தாக்கியதில் அவா் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மணியை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments