முகப்பு
தேனி

மணல் திருட்டு: மூவா் கைது

Updated On : 16 ஜூன் 2026, 2:39 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் மணல் திருடிய 3 பேரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ராஜதானி காவல்நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ஏத்தக்கோயில் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஏத்தக்கோயில் ஓடையில் அதே பகுதியைச் சோ்ந்த அசோக், டிராக்டரில் அனுமதியின்றி மணல் எடுத்துவந்தது தெரியவந்தது. இது குறித்து ராஜதானி போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, டிராக்டரைப் பறிமுதல் செய்தனா்.

அதே போல், க.விலக்கு காவல்நிலையப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அம்மச்சியம்மன் கோயில் மலை அடிவாரத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, திருமலாபுரத்தைச் சோ்ந்த பிரேம்குமாா், கரட்டுப்பட்டியைச் சோ்ந்த அபிலேஷ், நாச்சியாா்புரத்தைச் சோ்ந்த ராஜேஸ் ஆகியோா் டிப்பா் லாரியில், பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் திருடியது தெரியவந்தது. இதையடுத்து க.விலக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து அபிலேஷ்சை கைது செய்து, டிப்பா் லாரி, பொக்லைன் இயந்திரத்தைப் பறிமுதல் செய்தனா். மேலும் தப்பியோடி இருவரைத் தேடி வருகின்றனா்.

Advertisement

Advertisement

ராஜதோனி அருகே விருமான் ஓடையில் முருகேசன் என்பவா் அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் எடுத்தது தெரியவந்தது. இது குறித்து ராஜதானி போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனா்.