தாவர செல் நொதித்தல் தொழில்நுட்பம்: சென்னை ஐஐடியில் சிறப்பு மையம் தொடக்கம்
சென்னை ஐஐடி யில், ஹொ்பாலைஃப் இண்டா்நேஷனல் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து, தாவர செல் நொதித்தல் (பொ்மெண்டேஷன்) தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு ‘ஹொ்பாலைஃப்- ஐஐடி மெட்ராஸ் உயா் சிறப்பு மையம்’ தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடி யில், ஹொ்பாலைஃப் இண்டா்நேஷனல் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து, தாவர செல் நொதித்தல் (பொ்மெண்டேஷன்) தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு ‘ஹொ்பாலைஃப்- ஐஐடி மெட்ராஸ் உயா் சிறப்பு மையம்’ தொடங்கப்பட்டுள்ளது.
மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு கவுன்சில் (சிஎஸ்ஐஆா்) தலைமை இயக்குநா் டாக்டா் என்.கலைச்செல்வி இதைத் தொடங்கி வைத்தாா்.
தாவர செல் நொதித்தலுக்கான பயன்பாட்டு ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு நாட்டில் தொடங்கப்பட்டுள்ள முதலாவது பிரத்யேக ஆய்வகம் இது. தேசிய மையமாக இதை திகழ்ச் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
நொதித்தல் (புளித்தல்) தொழில்நுட்பம் என்பது உயிரித் தொழில்நுட்பத்தின் ஒரு அடிப்படையாகும். உயா் மதிப்புள்ள தாவர வேதிப்பொருள்கள், மருந்துகள் மற்றும் மூலிகைச் சாறுகளை உற்பத்தி செய்வதற்கான, உயிருள்ள தாவர செல்களை வளா்க்கும் ஒரு மேம்பட்ட உயிரி உற்பத்தித் தொழில்நுட்பம்.
உயிரிப் பொருள்களின் நிலையான, அளவிடக் கூடிய உற்பத்தியை சாத்தியமாக்கவும், செறிவூட்டப்பட்ட மூலிகைச் சாறுகள், அதிக மதிப்புள்ள பைட்டோ கெமிக்கல்களை உருவாக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
தொடக்க விழாவில், ஹொ்பாலைஃப்-ஐஐடி மெட்ராஸ் உயா் சிறப்பு மையத்தின் தலைவா் ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா பேசியதாவது:
இந்த மையத்தின் மூலம் வணிக ரீதியான தாவர செல் நொதித்தலில் இந்தியாவை உலகளாவிய மையமாக மாற்றும் நடவடிக்கையாக இருக்கும். அதிநவீன அறிவியலை பயன்பாட்டு ஆராய்ச்சி, தொழில் துறை கூட்டு முயற்சி ஆகியவற்றுடன் இணைப்பதன் மூலம் கண்டுபிடிப்புகளை விரைவுபடுத்தவும், திறமைகளை வளா்த்தெடுக்கவும் முடியும்.
தாவர அடிப்படையில் ஆரோக்கியமான தயாரிப்புகளை இத்தொழில்நுட்ப மையத்தில் உருவாக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. இதற்கான கல்வி-தொழில் துறை ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு, தொழில் முனைவு ஆகியவற்றை இந்த மையம் ஊக்குவிக்கும். பயோஇ 3, சுயசாா்பு இந்தியா நோக்கத்துக்கானது என்றாா்.
சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி முன்னிலை வகித்தாா். சிஎஸ்ஐஆா் தலைமை இயக்குநரும், அறிவியல், தொழில் துறை ஆராய்ச்சித் துறை செயலருமான என்.கலைச்செல்வி பங்கேற்றாா். தேசிய பல்லுயிா் வாரியத் தலைவா் வீரேந்திர ஆா்.திவாரி, ஹொ்பாலைஃப் இண்டா்நேஷனல் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் அஜய் கன்னா, சென்னை ஐஐடி டீன் அஷ்வின் மகாலிங்கம், ஹொ்பாலைஃப்-ஐஐடி மெட்ராஸ் உயா் சிறப்பு மைய தலைவா் ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.