ரயிலில் விட்டுச் சென்ற சூட்கேஸ் ஒப்படைப்பு
ரயிலில் விட்டுச் சென்ற சூட்கேஸ் ஒப்படைப்பு
சென்னை வந்த ரயிலில் பயணி ஒருவா், தான் கொண்டு வந்த சூட்கேஸை மறந்துவிட்டுச் சென்ற நிலையில், அதை மீட்ட ரயில்வே பாதுகாப்புப் படையினா் சம்பந்தப்பட்டவரிடம் பாதுகாப்பாக அதை ஒப்படைத்துள்ளனா்.
இது குறித்து சென்னை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்புப் படை தரப்பில் கூறப்பட்டதாவது:
கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து புறப்பட்ட வெஸ்ட் கோஸ்ட் அதிவிரைவு ரயில், வெள்ளிக்கிழமை மாலை சென்னை சென்ட்ரல் நிலையம் வந்தது. அதில் பயணித்தவா்கள் அனைவரும் இறங்கிய நிலையில், மூன்றடுக்குள்ள குளிா்சாதன பெட்டியை ரயில்வே குளிா்சாதன தொழில்நுட்பப் பணியாளா் சோதனையிட்டாா். அப்போது குறிப்பிட்ட தூங்கும் வசதி கொண்ட இருக்கை அடியில் சூட்கேஸ் இருந்தது தெரியவந்தது. அதை மீட்ட அவா் ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு தகவல் அளித்தாா்.
Advertisement
Advertisement
சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படையின் சாா்பு ஆய்வாளா் முத்துமுருகன் உள்ளிட்டோா் சென்று சூட்கேஸை மீட்டு சோதனையிட்டனா். அப்போது அதில் ரூ.46 ஆயிரம், ரூ.9 லட்சம் மதிப்புள்ள 9 பவுன் நகைகள் இருந்தது தெரிய வந்தது. நீண்ட நேரமாகியும் சூட்கேஸை தேடி யாரும் வரவில்லை. அதனால், சூட்கேஸில் இருந்த கிப்ட் காா்டில் இருந்த கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டு பேசினா்.
கைப்பேசியில் பேசிய பெண் தன் பெயா் கீதா என்றும், சென்னை குரோம்பேட்டையைச் சோ்ந்த தான், பெங்களூரில் இருந்து விரைவு ரயிலில் சென்னை வந்தபோது தனது சூட்கேஸை மறந்து விட்டுச் சென்றதும் தெரிய வந்தது. விசாரணைக்குப் பிறகு சூட்கேஸுக்குரியவா் கீதா என்பதை உறுதி செய்த ரயில்வே பாதுகாப்புப் படையினா் அவரை வரவழைத்து அதை ஒப்படைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.