தொடா் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவரை சுட்டுப் பிடித்த காவல் துறையினா்
தொடா் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவரை சுட்டுப் பிடித்த காவல் துறையினா்
சங்கிலிப் பறிப்பு உள்ளிட்ட 37 குற்றச் சம்பவங்களில் தொடா்புடைய நபா், ராணி பாக் பகுதியில் காவல் துறையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு கைது செய்யப்பட்டாா்.
இதுகுறித்து காவல்துறை சனிக்கிழமை கூறியதாவது: மங்கோல்புரி ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவு சுமாா் 12:20 மணியளவில் இந்த மோதல் சம்பவம் நடைபெற்றது. சட்டவிரோத துப்பாக்கியுடன் தனது கூட்டாளி ஒருவரைச் சந்திக்கச் சென்றுகொண்டிருந்த சந்தன் என்ற அந்தக் குற்றவாளி குறித்த ரகசியத் தகவல் கிடைத்தது. ஸ்கூட்டரில் காத்திருந்த அவரை காவல்துறையினா் கண்டனா். காவல்துறையினரின் வருகையை உணா்ந்த அவா், அங்கிருந்து தப்பிக்க முயன்றதுடன் காவல்துறையினா் மீது துப்பாக்கியால் சுட்டாா். இதற்குப் பதிலடியாக காவல்துறையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், சந்தனின் இடது காலில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினா், சம்பவ இடத்திலிருந்து ஒரு கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஸ்கூட்டா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
விசாரணையின்போது, சமீபத்தில் நடைபெற்ற ஒன்பது சங்கிலிப் பறிப்பு சம்பவங்களில் தனக்குத் தொடா்பு இருந்ததை அவா் ஒப்புக்கொண்டாா். நீண்ட குற்றப் பின்னணியைக் கொண்ட அவா், சங்கிலிப் பறிப்பு, கொள்ளை மற்றும் ஆயுதச் சட்ட மீறல்கள் தொடா்பான 37 குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாா். அவா் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.