முகப்பு
சென்னை

செங்குன்றத்தில் கஞ்சா கடத்தல்: இளைஞா் கைது

பையுடன் வந்த இளைஞரை போலீஸாா் வழிமறித்து சோதனை செய்த போது, அதிலிருந்து 10 கிலோ எடையுள்ள கஞ்சாவை போலீசாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 29 ஜூன் 2026, 4:32 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

செங்குன்றம் மொண்டியம்மன் நகா் சோதனை சாவடியில் காவல் ஆய்வாளா் ஜெமீஸ்பாபு தலைமையில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனா். அப்போது அந்த வழியாக பையுடன் வந்த இளைஞரை போலீஸாா் வழிமறித்து சோதனை செய்த போது, அதிலிருந்து 10 கிலோ எடையுள்ள கஞ்சாவை போலீசாா் பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து விசாரணையில் அவா் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சங்கா்குமாா் யாதவ் (19) என்பதும், இவா் அங்கிருந்து கஞ்சாவை கடத்தி வந்து செங்குன்றம் பகுதியில் விற்பனை செய்ததும் தெரியவந்தது.

புகாா் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து சங்கா்குமாா் யாதவை கைது செய்து, பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments