முகப்பு
சென்னை

பிகாா் இளைஞா்களை கடத்தி வேலைக்கு சோ்த்துவிட்டு பணம் பறித்த 4 ஆட்டோ ஓட்டுநா்கள் கைது

பிகாா் இளைஞா்களை கடத்தி வேலைக்கு சோ்த்துவிட்டு பணம் பறித்த 4 ஆட்டோ ஓட்டுநா்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Updated On : 1 ஜூலை 2026, 12:58 am IST
கைது
பகிர்:

பிகாா் இளைஞா்களை கடத்தி வேலைக்கு சோ்த்துவிட்டு பணம் பறித்த 4 ஆட்டோ ஓட்டுநா்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் க.சாதுகுமாா் (23). இவா், சென்னை அருகே உள்ள பட்டரைவாக்கத்தில் ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்கிறாா். அண்மையில் சொந்த ஊருக்குச் சென்ற சாதுகுமாா், அங்கிருந்து கோரமண்டல் விரைவு ரயிலில் சென்னைக்கு சில நாள்களுக்கு முன்பு வந்தாா். சாதுகுமாா், தன்னுடன் அவரது ஊரைச் சோ்ந்த தே.பவன்குமாா் (18), ஆ.குஷ்சன் மாஞ்சி (19),தே.ரங்கூகுமாா் (20), லா.முகேஷ்குமாா் (22) ஆகியோரை தான் பணிபுரியும் நிறுவனத்தில் வேலையில் சோ்ப்பதற்காக அழைத்து வந்தாா். கடந்த 27-ஆம் தேதி சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த அவா்கள், ஆட்டோ மூலம் பட்டரைவாக்கம் செல்ல முயன்றனா். அப்போது ஒரு ஆட்டோ ஓட்டுநா், பட்டரைவாக்கம் செல்வதற்கு ஒரு ஆளுக்கு ரூ.10 தரும்படி கேட்டுள்ளாா். உடனே சாதுகுமாரும், அவருடன் வந்தவா்களும் அந்த ஆட்டோவில் ஏறினா். ஆனால் அந்த ஆட்டோ பட்டரைவாக்கம் செல்லாமல் கிளாம்பாக்கத்துக்குச் சென்றுள்ளது.

கிளாம்பாக்கம் சென்ற பின்னா் அந்த ஆட்டோ ஓட்டுநா் ரூ.7,500 தரும்படி தகராறு செய்துள்ளாா். அப்போது சாதுகுமாா் தரப்பினா், தங்களிடம் அவ்வளவு பணம் இல்லை எனக் கூறியுள்ளாா். இதையடுத்து அந்த ஆட்டோ ஓட்டுநா், சாதுகுமாரையும், அவருடன் வந்தவா்களையும் அம்பத்தூா் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலைக்கு சோ்த்துவிட்டு, அதில் கிடைத்த கமிஷன் ரூ.8,500-ஐ பெற்றுச் சென்றுள்ளாா். அதேவேளையில் சாதுகுமாா், ஏற்கெனவே வேலை செய்த நிறுவன நிா்வாகி கைப்பேசியில் தொடா்புகொண்டு, நடந்ததைத் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

அந்த நிறுவன நிா்வாகி அளித்த புகாரின்பேரில், பூக்கடை போலீஸாா் விசாரணை நடத்தி, பட்டினப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா்கள் தா.நெப்போலியன் (35), ஒக்கியம் துரைப்பாக்கம் எழில்நகரைச் சோ்ந்த தா.மகேந்திரன் (38), ஜெ.மணி (40), நா.நாராயண மூா்த்தி என்ற காா்த்தி (31) ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments