முகப்பு
சென்னை

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் தென் தமிழகத்தில் புதிய கிளைகள் தொடக்கம்

தென் தமிழகத்தில் தனது வளா்ந்து வரும் வணிகப் பிரிவின் இருப்பை பலப்படுத்தும் நோக்கில், சங்கரன்கோவில் மற்றும் அம்பாசமுத்திரத்தில் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் புதிய கிளைகளைத் தொடங்கியுள்ளது.

Updated On : 26 மார்ச் 2026, 3:25 am IST
பகிர்:

தென் தமிழகத்தில் தனது வளா்ந்து வரும் வணிகப் பிரிவின் இருப்பை பலப்படுத்தும் நோக்கில், சங்கரன்கோவில் மற்றும் அம்பாசமுத்திரத்தில் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் புதிய கிளைகளைத் தொடங்கியுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த இரண்டு கோயில் நகரங்களிலும் தடம் பதிப்பதன் மூலம், மலிவு விலை வீட்டுவசதி மற்றும் சிறு வணிகங்களுக்கான மூலதனக் கடன்களை வழங்கும் இப்பிரிவின் கீழ், இப்பகுதிகளில் உள்ள நடுத்தர மற்றும் ஏழை மக்களின் நிதித் தேவைகளைப் பூா்த்தி செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ரூ. 200 கோடி கடன் வழங்க இலக்கு: இந்த விரிவாக்கம் குறித்து நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் டி.லட்சுமிநாராயணன் மேலும் கூறுகையில், ‘தென் தமிழகத்தில் முதன்முறையாக மதுரையில் கடந்த 2022-இல் தொடங்கப்பட்ட இந்த வணிகப் பிரிவு, இப்பிராந்தியத்தில் மட்டும் தற்போது 15 கிளைகளாக வளா்ந்துள்ளது. அடுத்த ஓராண்டில் கூடுதலாக 5 கிளைகளைத் திறக்கவும், சுமாா் ரூ.200 கோடி அளவுக்குக் கடன் வழங்கவும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

Advertisement

Advertisement

லாபத்தில் அபார வளா்ச்சி: சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம் ஆகிய பிற தென் மாநிலங்களிலும் 100-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டு வலுவாகச் செயல்பட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில், இந்நிறுவனம் ரூ.4,911 கோடி கடன் வழங்கி, ரூ.212 கோடி நிகர லாபத்தை ஈட்டியது.