முகப்பு
வணிகம்

4-ஆம் காலாண்டு லாபம்: ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ்: ரூ.129 கோடி

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம், கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.129 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

Updated On : 23 மே 2026, 4:18 am IST
பகிர்:

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம், கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.129 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலாண்டின் ரூ.125 கோடி லாபத்தைவிட இது சற்று கூடுதலாகும்.

மதிப்பீட்டு காலாண்டில், நிறுவனத்தின் மொத்த வருவாய் முந்தைய ஆண்டின் ரூ.425 கோடியிலிருந்து 7 சதவீதம் அதிகரித்து, ரூ.454 கோடியாக உள்ளது. நிகர வட்டி வருவாய் ரூ.178 கோடியிலிருந்து 16 சதவீத வளா்ச்சியுடன், ரூ.207 கோடியாக அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

புதிய கடன்களுக்கான ஒப்புதல் 25 சதவீதம் அதிகரித்து, ரூ.1,320 கோடியாக உள்ளது. வாடிக்கையாளா்களுக்கு விடுவிக்கப்பட்ட கடன் தொகையும் 22 சதவீதம் அதிகரித்து, ரூ.1,186 கோடியை எட்டியுள்ளது.

மாா்ச் 31 நிலவரப்படி, நிறுவனத்தின் ஒட்டுமொத்த கடன் இருப்பு ரூ.14,492 கோடியிலிருந்து 9.6 சதவீத வளா்ச்சியுடன், ரூ.15,880 கோடியாக அதிகரித்துள்ளது. நிகர வாராக்கடன் 1.32 சதவீதத்திலிருந்து 1.17 சதவீதமாக குறைந்து, சொத்துத் தரம் சிறப்பான முறையில் மேம்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 210 கிளைகள், 32 துணை மையங்களுடன் செயல்படும் இந்நிறுவனம், ஒழுங்குமுறை அளவான 15 சதவீதத்தைவிட இரு மடங்கு அதிகமாக 35.38 சதவீத மூலதனப் போதுமான விகிதத்தைக் கொண்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments