லிபர்ட்டி ஷூ: Q4 நிகர லாபம் 5.5% சரிவு!
லிபர்ட்டி ஷூ, 2026 நிதியாண்டின் 4வது காலாண்டில், அதன் நிகர லாபம் கடந்த ஆண்டை விட 5.5 சதவீதம் சரிந்து ரூ. 5.29 கோடியாக இருப்பதாக அறிவித்தது.
புதுதில்லி: லிபர்ட்டி ஷூ லிமிடெட், 2026 நிதியாண்டின் மார்ச் வரையான காலாண்டில், அதன் நிகர லாபம் கடந்த ஆண்டை விட 5.5 சதவீதம் சரிந்து ரூ. 5.29 கோடியாக இருப்பதாக அறிவித்தது.
கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிறுவனம் ரூ. 5.60 கோடி நிகர லாபத்தைப் ஈட்டியிருந்தது.
2026 நிதியாண்டின் 4வது காலாண்டில், நிறுவனத்தின் மொத்த வருமானம் 13 சதவீதம் உயர்ந்து ரூ. 212.27 கோடியாக இருந்தது. இதுவே, கடந்த ஆண்டு, இதே காலாண்டில், நிறுவனத்தின் வருமானம் ரூ. 187.80 கோடியாக இருந்தது.
Advertisement
Advertisement
மார்ச் வரையான காலாண்டில் நிறுவனத்தின் மொத்தச் செலவுகள் 15.22 சதவீதம் அதிகரித்து ரூ. 206.15 கோடியாக இருந்தது. 2026 நிதியாண்டு முழுவதற்கும் சேர்த்துப் பார்க்கையில், நிறுவனத்தின் நிகர லாபம் 17.5 சதவீதம் சரிந்து ரூ. 11.19 கோடியாகக் குறைந்துள்ளது.
மார்ச் 2026 அன்று முடிவடைந்த இந்த நிதியாண்டில், நிறுவனத்தின் மொத்த வருவாய் 9.5 சதவீதம் உயர்ந்து ரூ. 740.5 கோடியாகப் பதிவானது.
மும்பை பங்குச் சந்தையில், நேற்றைய வர்த்தகத்தின் முடிவில், லிபர்ட்டி ஷூ பங்கின் விலை ரூ. 250ஆக இருந்தது.
Liberty Shoes Ltd reported a 5.5 per cent on-year decline in net profit.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.