ஜேகே சிமென்ட் 2வது காலாண்டு லாபம் 6.3 சதவீதம் உயர்வு!
விற்பனை அளவு அதிகரித்ததால், நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 6.31 சதவீதம் அதிகரித்து ரூ. 169.3 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது.
புதுதில்லி: விற்பனை அளவு அதிகரிப்பால், ஜேகே சிமென்ட் லிமிடெட், நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 6.31 சதவீதம் அதிகரித்து ரூ. 169.3 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது.
ஜேகே குழுமத்தின் முதன்மை நிறுவனமான ஜேகே சிமென்ட் லிமிடெட், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ. 159.25 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ. 3,019.20 கோடியாக இருந்த அதன் செயல்பாட்டு வருவாய், 2027 நிதியாண்டின் 2வது காலாண்டில் 23.65 சதவீதம் அதிகரித்து ரூ. 3,733.42 கோடியாக உயர்ந்துள்ளது.
நிதியாண்டின் 2வது காலாண்டில் அதன் சிமெண்ட் விற்பனை அளவு 21 சதவீதம் அதிகரித்து 5.37 மில்லியன் டன்னாக இருந்தது. அதேபோல், வெள்ளை சிமெண்ட் 13 சதவீதம் அதிகரித்து 0.49 மில்லியன் டன்களாக இருந்தது.
Advertisement
Advertisement
நிதியாண்டின் 2வது காலாண்டில் நிறுவனத்தின் செலவு 24.34 சதவீதம் அதிகரித்து ரூ. 3,515.71 கோடியாகவும், இதர வருமானம் உள்ளிட்ட மொத்த வருமானமும் 22.84 சதவீதம் அதிகரித்து ரூ. 3,771.29 கோடியாக இருப்பதாக தெரிவித்தது.
தெலங்கானாவின் சூர்யபேட் மாவட்டத்தில் உள்ள ரகுநாதபாலத்தில் ஆண்டுக்கு 75,000 கிலோலிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய நீர் சார்ந்த பெயிண்ட் உற்பத்தி ஆலையை அமைப்பதற்கான அதன் துணை நிறுவனமான ஜேகே மேக்ஸ் பெயிண்ட்ஸ் லிமிடெட் முன்மொழிவைக் கருத்தில் கொண்டு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்து.
JK Cement Ltd reported a 6.31 per cent increase in its consolidated net profit.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.