FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் 2வது காலாண்டு லாபம் 31 சதவீதம் உயர்வு!

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, நிதியாண்டின் 2வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 31 சதவீதம் உயர்ந்து ரூ. 5,781 கோடியாக அதிகரித்துள்ளதாக அறிவித்தது.

19 அக்டோபர் 2026, 10:05 pm IST
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா
பகிர்:

மும்பை: அரசுக்குச் சொந்தமான யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, அதிகரித்த நிகர வட்டி வருமானம் உள்ளிட்ட பிரிவில் ஏற்பட்ட முன்னேற்றத்தால், நிதியாண்டின் 2வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 31 சதவீதம் உயர்ந்து ரூ. 5,781 கோடியாக அதிகரித்துள்ளதாக இன்று அறிவித்தது.

இதுவே கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் வங்கி ரூ. 4425.95 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.

நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த வருடம் ரூ. 4,249.08 கோடியாக இருந்த நிலையில், ஜூலை முதல் செப்டம்பர் வரையான 2 வது காலாண்டில் அது 30.32 சதவீதம் அதிகரித்து ரூ. 5,537.20 கோடியாக உயர்ந்துள்ளது.

Advertisement

Advertisement

வங்கியின் முக்கிய வருவாய் ஆதாரமான நிகர வட்டி வருமானம், கடந்த ஆண்டின் 2வது காலாண்டில் ரூ. 8,812 கோடியாக இருந்த நிலையில், நிதியாண்டின் 2 வது காலாண்டில் இது 20.09 சதவீதம் அதிகரித்து ரூ. 10,583 கோடியாக உயர்ந்துள்ளது.

நிதியாண்டின் 2வது காலாண்டில், உள்நாட்டு நிகர வட்டி வரம்பு கடந்த காலாண்டில் 2.87 சதவீதமாகவும், கடந்த ஆண்டு இது 2.75 சதவீதமாகவும் இருந்த நிலையில், தற்போது 2.95 சதவீதமாக உயர்ந்துள்ளது.

உலகளாவிய நிகர வட்டி வரம்பு ஓராண்டுக்கு முன்பு 2.80 சதவீதமாகவும், செப்டம்பர் 2025 நிலவரப்படி 2.67 சதவீதமாகவும் இருந்த நிலையில், செப்டம்பர் 2026 நிலவரப்படி 2.86 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அறிக்கை செய்யப்பட்ட காலாண்டில், வட்டி அல்லாத வருமானம் ஆண்டுக்கு ஆண்டு 6.90 சதவீதம் குறைந்து ரூ. 4,996 கோடியிலிருந்து ரூ. 4,651 கோடியாக ஆனது.

ஓராண்டுக்கு முன்பு ரூ.12.35 லட்சம் கோடியாக இருந்த அதன் உலகளாவிய வைப்புத்தொகை, இந்தக் காலாண்டில் 6.87 சதவீதம் அதிகரித்து ரூ.13.19 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

உள்நாட்டு வைப்புத்தொகை, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்த ரூ.12.34 லட்சம் கோடியிலிருந்து, ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலாண்டில் அது 6.88 சதவீதம் அதிகரித்து ரூ.13.19 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

summary

State-owned lender Union Bank of India on Monday reported a 31 per cent rise in consolidated net profit.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments