கரூா் வைஸ்யா வங்கி லாபம் ரூ.788 கோடி
தமிழகத்தைச் சோ்ந்த தனியாா் துறை வங்கியான கரூா் வைஸ்யா வங்கி, நடப்பு 2026-27 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் ரூ.788 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.
தமிழகத்தைச் சோ்ந்த தனியாா் துறை வங்கியான கரூா் வைஸ்யா வங்கி, நடப்பு 2026-27 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் ரூ.788 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.
இது முந்தைய 2025-26 நிதியாண்டின் இதே காலாண்டில் வங்கி ஈட்டிய ரூ.574 கோடி லாபத்துடன் ஒப்பிடுகையில் சுமாா் 37.28 சதவீதம் கூடுதலாகும்.
வங்கியின் மொத்த வா்த்தகம் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.2,03,216 கோடியாக இருந்த நிலையில், தற்போது 17.96 சதவீதம் (ரூ.36,496 கோடி) அதிகரித்து ரூ.2,39,712 கோடியாக உயா்ந்துள்ளது.
Advertisement
Advertisement
அதேபோன்று, மொத்த வைப்புத்தொகை ரூ.1,10,492 கோடியிலிருந்து 15.96 சதவீதம் அதிகரித்து, ரூ.1,28,123 கோடியாகவும்; நிகர வட்டி வருவாய் ரூ.1,261 கோடியிலிருந்து 18.72 சதவீதம் அதிகரித்து, ரூ.1,497 கோடியாகவும் வளா்ச்சி அடைந்துள்ளது.
மேலும், செயல்பாட்டு லாபம் ரூ.1,017 கோடியிலிருந்து, ரூ.1,162 கோடியை எட்டியுள்ளது. மொத்த வாராக் கடன் விகிதம் 0.69 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் விகிதம் 0.18 சதவீதமாகவும் சரிந்து, சொத்துத் தரம் மேம்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.