ஸ்ரீராம் ஃபைனான்ஸ் Q2 நிகர லாபம் 59% உயர்வு!
ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிதியாண்டின் 2வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 59% அதிகரித்து ரூ. 3,684 கோடியாக அதிகரிப்பு.
புதுதில்லி: ஸ்ரீராம் ஃபைனான்ஸ் லிமிடெட், நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 59% அதிகரித்து ரூ.3,684 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் 2வது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.2,314 கோடியாக இருந்தது.
மதிப்பாய்வுக்கு உட்பட்ட காலாண்டில் மொத்த வருமானம் ரூ.13,802 கோடியாக உயரந்த நிலையில், கடந்த ஆண்டு இதே காலத்தில் இது ரூ.11,921 கோடியாக இருந்தது.
நிறுவனத்திந் மொத்த செலவுகள் சற்று அதிகரித்து ரூ. 8,870 ஆக அதிகரித்த நிலையில், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது ரூ. 8,808 கோடியாக இருந்தது.
Advertisement
Advertisement
வங்கி சாரா நிதி நிறுவனமான ஸ்ரீராம் ஃபைனான்ஸ் இந்த காலாண்டில் ரூ.13,386 கோடி வட்டி வருமானத்தை ஈட்டியது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இது ரூ.11,551 கோடியாக இருந்தது.
செப்டம்பர் 2026 நிலவரப்படி, நிறுவனத்தின் சொத்து தரத்தில் பெரிய மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. மொத்தக் கடன் வழங்கல்களில் மொத்த வாராக்கடன்களின் விகிதம் 4.65 சதவீதமாக இருந்தது. கடந்த நிதியாண்டின் 2வது காலாண்டு இறுதியில் இது 4.57 சதவீதமாக இருந்தது.
நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.13,799 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் இது ரூ.11,917 கோடியாக இருந்தது.
நிதியாண்டின் 2வது காலாண்டில், நிர்வாகத்தின் கீழ் உள்ள மொத்த சொத்துகளின் மதிப்பு 17 சதவீதம் அதிகரித்து ரூ. 3,29,022 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவே 2025 செப்டம்பர் 30ஆம் தேதியன்று ரூ. 2,81,309 கோடியாக இருந்தது.
தலா ரூ. 2 முகமதிப்பு கொண்ட ஈக்விட்டி பங்கு ஒன்றுக்கு ரூ. 6.50 இடைக்கால டிவிடெண்ட் வழங்குவதற்கு நிறுவனத்தின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
Shriram Finance Ltd reported a 59 per cent increase in consolidated net profit.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.