ரேடிக்கோ கைதான் Q2 லாபம் 66% உயர்வு!
ரேடிக்கோ கைதான், நிதியாண்டின் 2வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 66.5 சதவீதம் அதிகரித்து ரூ. 232.34 கோடியாக இருப்பதாக அறிவித்தது.
புதுதில்லி: உள்நாட்டு மதுபான நிறுவனமான ரேடிக்கோ கைதான், பிரீமியம் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கும் தனது கொள்கையால், நிதியாண்டின் 2வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 66.5 சதவீதம் அதிகரித்து ரூ. 232.34 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது.
ராம்பூர் இந்தியன் சிங்கிள் மால்ட் விஸ்கி, ஜெய்சல்மர் இந்தியன் கிராஃப்ட் ஜின், மேஜிக் மொமென்ட்ஸ் ஓட்கா மற்றும் 8 பிஎம் சீரிஸ் ஆகிய பிராண்டுகளைக் கொண்டுள்ள ரேடிக்கோ கைதான், கடந்த ஆண்டு ரூ. 139.55 கோடி நிகர லாபம் ஈட்டியது.
நிதியாண்டின் 2வது காலாண்டில் அதன் செயல்பாடு மூலம் கிடைத்த வருவாய், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10.4 சதவீதம் அதிகரித்து ரூ. 5,582.71 கோடியாக இருப்பதாக தெரிவித்தது.
Advertisement
Advertisement
மொத்த விற்பனை அளவு 10.1% அதிகரித்து 98.3 லட்சம் கேஸ்களாக உயர்ந்தது. இதில், பிரெஸ்டீஜ் மற்றும் அதற்கு மேற்பட்ட பிரிவின் விற்பனை 35.8% வளர்ச்சியடைந்து.
நிதியாண்டின் 2வது காலாண்டில், விற்பனை 9.7% குறைந்து 45.5 லட்சம் கேஸ்களாக இருந்தது. செப்டம்பர் வரையான காலாண்டில் நிறுவனத்தின் மொத்த செலவு 8.35 சதவீதம் அதிகரித்து ரூ. 5,280.04 கோடியாக இருந்தது.
ரேடிக்கோ கைத்தானின் பிரீமியம் தயாரிப்புகள், அதன் விஸ்கி தயாரிப்புகளின் வலுவான வளர்ச்சியால், வோட்கா விற்பனை 49% அதிகரித்து 29.6 லட்சம் கேஸ்களாக உள்ளது.
இதர வருமானத்தையும் உள்ளடக்கிய மொத்த வருமானம், செப்டம்பர் காலாண்டில் 10.45% அதிகரித்து ரூ. 5,587.76 கோடியாக உள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் ரேடிக்கோ கைதான் நிறுவனத்தின் பங்குகள் 1.79% உயர்ந்து, பங்கு ஒன்றுக்கு ரூ. 4,275 ஆக நிலைபெற்றது.
Radico Khaitan reported a 66.5 per cent increase in consolidated net profit.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.