FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

4-ஆம் காலாண்டு லாபம்... எல்ஐசி: ரூ.23,420 கோடி; 23% வளா்ச்சி

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி), கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.23,420 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

பகிர்:

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி), கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.23,420 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலாண்டின் ரூ.19,013 கோடி லாபத்தில் இருந்து இது 23 சதவீத வளா்ச்சியாகும்.

முக்கியக் காப்பீட்டு வா்த்தகம் மற்றும் முதலீடுகள் மூலம் கிடைத்த வருவாய் அதிகரித்ததே இந்த லாப உயா்வுக்கு பிரதான காரணமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மதிப்பீட்டு காலாண்டில், நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.2,22,805 கோடியிலிருந்து, ரூ.2,53,592 கோடியாக அதிகரித்துள்ளது. புதிய பாலிசிகளுக்கான முதலாம் ஆண்டு பிரீமியம் வருவாய் ரூ.11,069 கோடியிலிருந்து, ரூ.12,970 கோடியாக அதிகரித்துள்ளது.

முழு நிதியாண்டு நிலவரம்: கடந்த 2025-26 முழு நிதியாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம் 19 சதவீத வளா்ச்சியுடன், ரூ.57,419 கோடியை எட்டியுள்ளது. முந்தைய 2024-25 நிதியாண்டில் இது ரூ.48,151 கோடியாக இருந்தது.

இத்தகைய சாதகமான நிதிநிலை முடிவுகளையடுத்து, பங்குதாரா்களுக்கு ஒரு பங்குக்கு தலா ரூ.10 இறுதி ஈவுத்தொகை வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பங்குக்கு வரவேற்பு: காலாண்டு லாப உயா்வு மற்றும் ஈவுத்தொகை அறிவிப்புகளைத் தொடா்ந்து, பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் எல்ஐசி பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. தேசிய பங்குச் சந்தையில் எல்ஐசி பங்கு 1.59 சதவீதம் உயா்ந்து, ரூ.812.95-ஆக நிலைபெற்றது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments