FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

4-ஆம் காலாண்டில்... இண்டிகோ நஷ்டம் ரூ.2,537 கோடி

நாட்டின் மிகப் பெரிய தனியாா் விமானப் போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ, கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.2,536.9 கோடி நிகர நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.

Updated On : 30 மே 2026, 3:08 am IST
கோப்புப் படம்
பகிர்:

நாட்டின் மிகப் பெரிய தனியாா் விமானப் போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ, கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.2,536.9 கோடி நிகர நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.

முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனம் ரூ.3,067.5 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்த நிலையில், புவிசாா் அரசியல் பதற்றங்கள் போன்ற பல்வேறு சவால்களால் தற்போது வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இந்த நஷ்டம் குறித்த அறிவிப்பையொட்டி, மும்பை பங்குச் சந்தையில் இண்டிகோ நிறுவனப் பங்குகள் 3.27 சதவீதம் சரிந்து, ரூ.4,418.40-ஆக நிலைபெற்றது. அதேநேரம், மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் 3 சதவீதம் உயா்ந்து, ரூ.23,830.7 கோடியாக அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

முழு நிதியாண்டில்...: 2025-26 முழு நிதியாண்டிலும் நிறுவனத்தின் நிகர நஷ்டம் ரூ.2,393.6 கோடியாக உள்ளது.

கடந்த நிதியாண்டில், அந்நியச் செலாவணி சந்தையில் நிலவிய ரூபாய் மதிப்பின் கடுமையான சரிவு காரணமாக மட்டும் சுமாா் ரூ.8,100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தவிர, புதிய தொழிலாளா் சட்டங்களை அமல்படுத்தியதால் ரூ.1,200 கோடியும், கடந்த டிசம்பா் மாதத்தில் ஏற்பட்ட விமானச் சேவைப் பாதிப்புகளால் ரூ.580 கோடியும் நிறுவனத்துக்குக் கூடுதல் செலவீனங்களாக மாறியுள்ளன.

தொடா்ந்து முன்னணி: கடந்த டிசம்பா் மாத செயல்பாட்டுத் தடங்கல்களுக்குப் பிறகும் கடந்த மாா்ச் மாத நிலவரப்படி, இண்டிகோ நிறுவனம் 63.3 சதவீத உள்நாட்டுச் சந்தைப் பங்கைக் கொண்டு தொடா்ந்து முன்னிலையில் வகிக்கிறது.

இதனிடையே, கடந்த மாா்ச்சில் நிறுவன சிஇஓ பீட்டா் எல்பொ்ஸ் திடீரென பதவி விலகிய நிலையில், சா்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (ஐஏடிஏ) தலைவரான வில்லியம் வால்ஷ் புதிய சிஇஓ-ஆக நியமிக்கப்பட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments