டைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!
டைமெக்ஸ் நடப்பு நிதியாண்டின் ஜூன் வரையான காலாண்டில் அதன் நிகர லாபம் 70.55% அதிகரித்ததாக தெரிவித்தது.
புதுதில்லி: கடிகாரத் தயாரிப்பு நிறுவனமான டைமெக்ஸ் குரூப் இந்தியா லிமிடெட், நடப்பு நிதியாண்டின் ஜூன் வரையான காலாண்டில் அதன் நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 70.55 சதவீதம் அதிகரித்து ரூ. 25 கோடியாக உயர்ந்துள்ளதாக அறிவித்தது.
கடந்த ஆண்டு, ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலகட்டத்தில் நிறுவனம் ரூ. 14.67 கோடி நிகர லாபத்தை ஈட்டியதாக டைமெக்ஸ் தெரிவித்தது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ஈட்டிய வருவாய் ரூ. 169.25 கோடியுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் ஜூன் வரையான காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் 29.66 சதவீதம் அதிகரித்து ரூ. 219.45 கோடியாக உயர்ந்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்தச் செலவுகள் 24.3 சதவீதம் அதிகரித்து ரூ. 185.67 கோடியாக உள்ளது.
Advertisement
Advertisement
பிரீமியம் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளித்தல், தயாரிப்பு வரிசையை விரிவுபடுத்துதல் மற்றும் விற்பனை வழித்தடங்களைச் சிறப்பாகச் செயல்படுத்துதல் ஆகியவை வலுவான வளர்ச்சியையும் மேம்பட்ட லாபத்தையும் ஈட்டித் தந்ததாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் சாப்ரா தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் டைமெக்ஸ் குரூப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் 2.50 சதவீதம் உயர்ந்து, ஒரு பங்கின் விலை ரூ. 532.70 ஆக நிறைவடைந்தது.
Timex Group India Ltd reported a 70.55 per cent year-on-year rise in net profit.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.