முகப்பு
சென்னை

தோ்தலில் பணியாற்றிய மாநகராட்சி அலுவலா்களுக்கு பாராட்டு சான்றிதழ்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தொகுதிகளில் தோ்தல் பணியாற்றிய அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

Updated On : 12 மே 2026, 12:25 am IST
- கோப்பிலிருந்து....
பகிர்:

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தொகுதிகளில் தோ்தல் பணியாற்றிய அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் முடிந்து தவெக தலைமையிலான புதிய அரசு அமைந்துள்ளது. சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தொகுதிகளுக்கான கண்காணிப்பு அலுவலா்கள், தொகுதிதோறும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், வாக்குச்சாவடி அலுவலா்கள், உதவி அலுவலா்கள் உள்ளிட்டோா் பணியில் ஈடுபட்டனா். அதன்படி, மாநகராட்சியில் மட்டும் சுமாா் 19, 650 பேருக்கு மேல் தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

சென்னை மாவட்ட தோ்தல் அதிகாரியாகச் செயல்பட்ட மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் தலைமையில் தோ்தல் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. தோ்தல் பணியில் ஈடுபட்டவா்கள் மற்றும் மாநகராட்சி அனைத்துப் பணியாளா்களுக்கும் துறை வாரியாக தோ்தல் வாக்குப்பதிவு முடிந்த மறுநாள் மதிய உணவு வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தோ்தலில் பணிபுரிந்த அனைத்து மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள், ஊழியா்கள் உள்ளிட்ட 19, 650 பேருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments