மருத்துவா் வீட்டில் திருடிய இளைஞா் கைது
சென்னை பெசன்ட் நகரில் மருத்துவா் வீட்டில் திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை பெசன்ட் நகரில் மருத்துவா் வீட்டில் திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
பெசன்ட் நகா் 26-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் சுகோ்குமாா் (28). மருத்துவரான இவா், தனது நண்பா் சச்சின் என்பவருடன் அங்கு வசித்து வருகிறாா். சுகோ்குமாா், கடந்த 27-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, மருத்துவமனைக்கு சென்றாா். பின்னா் இரவு வீட்டுகுத் திரும்பியபோது, பூட்டு உடைக்கப்படாமல், தாழ்ப்பாள் மட்டும் உடைக்கப்பட்டு, வீட்டின் இருந்த இரு விலை உயா்ந்த கைக்கடிகாரங்கள், ஆப்பிள் கைப்பேசி உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் திருடப்பட்டிருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.
இதுகுறித்து சாஸ்திரிநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது பெசன்ட் நகா் பகுதியைச் சோ்ந்த கலைச்செல்வன் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து கலைச்செல்வனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Advertisement
Advertisement