முகப்பு
காஞ்சிபுரம்

செங்கல்பட்டில் குடிநீருடன் கழிவுநீர் கலப்பு : மக்கள் அவதி

செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சியால் 10 நாள்கள் முதல் 16 நாள்கள் இடைவெளியில் சுழற்சி முறையில் விநியோகிக்கப்படும் குடிநீருடன் கழிவுநீரும் கலந்து வருவதால் மக்கள் பெரிதும்

Updated On : 24 ஜூலை 2018, 4:47 am IST
பகிர்:

செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சியால் 10 நாள்கள் முதல் 16 நாள்கள் இடைவெளியில் சுழற்சி முறையில் விநியோகிக்கப்படும் குடிநீருடன் கழிவுநீரும் கலந்து வருவதால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
செங்கல்பட்டு நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் சுழற்சி முறையில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. 
தற்போது 15 நாள்களுக்கு ஒருமுறை நகராட்சியால் விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீரும் கலந்து வருவதால் சுகாதாரச் சீர்கேடும் வயிற்றுப்போக்கு, தோல்நோய் உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உருவாகி வருகிறது. இதுபற்றி நகராட்சி அலுவலகத்திலும் ஆணையரிடமும் பலமுறை புகார் செய்தும் பயனில்லை. 
நகராட்சி அதிகாரிகளிடம் இது பற்றிக் கேட்டபோது நகராட்சியில் ஆள் பற்றாக்குறை உள்ளது. பழுதான மின்மோட்டார்களை சீரமைக்க இயலாமல் நிதி பற்றாக்குறை உள்ளது. பணிகள் சீரடையும் வரை பொதுமக்கள் லாரி குடிநீரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என்று கூறுகின்றனர். 
ஆனால், செங்கல்பட்டு நகரில் வசிக்கும் பெரும்பாலோர் வீடுகளில் வாடகைக்கு வசிப்பவர்கள் ஆவர். அவர்கள் குடும்பச் செலவை சமாளிக்கவே குடும்பத்தில் அனைவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 
குடிநீர் லாரி வரும் நேரத்தில் வேலைக்குச் செல்வோர் தண்ணீரைப் பிடிப்பதில் சிக்கல் உள்ளது. அது மட்டுமின்றி லாரியில் விநியோகிக்கப்படும் குடிநீர் சமையலுக்கே பற்றாக்குறையாக உள்ளது. மற்றபடி குளிக்கவும், துணிகள் துவைக்கவும் முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 
சில பகுதிகளில் வீடுகளில் தனியார் லாரி மூலம் குடிநீரை லாரி கொள்ளளவுக்கேற்ப ரூ. 750 
முதல் ரூ.1000 வரை விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக வாடகை வீடுகளில் வசிக்கும் பெரும்பாலானோர் வாடகைக்கு அடுத்தபடியாக தண்ணீருக்கும் பணம் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் செலவுகளை சமாளிக்க முடியாமல் நடுத்தர மக்கள் தடுமாறுகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் இவ்விஷயத்தில் தலையிட்டு போர்க்கால அடிப்படையில் செங்கல்பட்டு நகராட்சியில் குடிநீர் விநியோகப் பிரச்னையைத் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments