வருமான வரித்துறையினர் போல் நடித்து 45 பவுன் நகைகள் திருட்டு
வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து தனியார் நிறுவனர் வீட்டில் 45 பவுன், ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திங்கள்கிழமை திருடிச் சென்றனர்.
வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து தனியார் நிறுவனர் வீட்டில் 45 பவுன், ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திங்கள்கிழமை திருடிச் சென்றனர்.
காஞ்சிபுரம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் குமரவேல். தனியார் நிதி நிறுவன அதிபரான அவர் தன் மனைவியுடன் காலை வெளியே சென்றிருந்தார். அவரது வீட்டில் மாமியார் சரஸ்வதி மட்டும் தனியார் இருந்துள்ளார். அப்போது குமரவேல் வீட்டுக்கு சொகுசு கார் ஒன்றில் டிப்-டாப் உடை அணிந்து 5 பேர் வந்தனர். அவர்கள், சரஸ்வதியிடம் காஞ்சிபுரம் வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து வந்துள்ளதாகவும், வீட்டில் சோதனை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
பின்னர் சரஸ்வதியை வீட்டுக்குள் அழைத்துச் சென்ற அந்த நபர்கள், கதவை உள்புறமாக பூட்டினர். பின்பு, சரஸ்வதியிடம் பீரோ சாவியைப் பெற்ற அந்த கும்பல், பீரோவைத் திறந்து அதில் இருந்த நகை, பணத்தை அள்ளினர். சுமார் அரை மணி நேரம் வீட்டுக்குள் இருந்த அந்த நகை, ரொக்கம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு காஞ்சிபுரத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு வருமாறு கூறி விட்டு காரில் ஏறிச் சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து சரஸ்வதி தனது மருமகனுக்கு செல்லிடப்பேசி மூலம் தகவல் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, குமரவேல் தனது வீட்டுக்கு வந்து விசாரித்தார். அந்த நபர்கள் மீதான சந்தேகத்தின் பேரில், காஞ்சிபுரம் கிராமிய காவல்நிலையத்தில் குமரவேல் புகார் அளித்தார். போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் மர்ம நபர்கள் 45 பவுன் நகைகள், ரூ.15 ரொக்கம் ஆகியவற்றை எடுத்துச் சென்றது தெரிய வந்தது. அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவைக் கைப்பற்றி ஆய்வு செய்து, போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.