முகப்பு
காஞ்சிபுரம்

பைக் கவிழ்ந்து 2 பேர் சாவு

உத்தரமேரூர் அருகே சாலையில் சென்ற பைக் நிலைதடுமாறிக் கவிழ்ந்ததில் இருவர் இறந்தனர்.

Updated On : 15 ஜனவரி 2019, 3:33 am IST
பகிர்:


உத்தரமேரூர் அருகே சாலையில் சென்ற பைக் நிலைதடுமாறிக் கவிழ்ந்ததில் இருவர் இறந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூரை அடுத்த அலத்திரை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசக்தி(29). அவர் தனது அண்ணி ரேகாவுடன் (28) ஒரகடத்துக்கு அலுவலகப் பணி நிமித்தமாக, தனது பைக்கில் அலத்திரையில் இருந்து புறப்பட்டார். உத்தரமேரூரை அருகே பென்னலூர் கிராமம் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக அவரது பைக் நிலைதடுமாறியதில் இருவரும் சாலையோரம் விழுந்தனர். 
இதில் சிவசக்தி தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரேகா பலத்த காயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். எனினும், அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். 
இதுகுறித்து உத்தரமேரூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments