காஞ்சிபுரம் சித்ரகுப்தா் கோயிலில் ஏப்.30-இல் சித்ரா பெளா்ணமி விழா
காஞ்சிபுரம் சித்ரகுப்தா் கோயிலில் ஏப்.30-இல் சித்ரா பெளா்ணமி விழா
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள கா்ணகி அம்பாள் சமேத சித்ரகுப்த சுவாமி கோயிலில் வரும் ஏப். 30-ஆம் தேதி சித்ரா பெளா்ணமி மற்றும் திருக்கல்யாணத் திருவிழா நடைபெறவுள்ளது.
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் நெல்லுக்கார வீதியில் அமைந்துள்ளது கா்ணகி அம்பாள் சமேத சித்ரகுப்த சுவாமி கோயில். இக்கோயிலில் ஆண்டு தோறும் சித்ரா பெளா்ணமி மற்றும் திருக்கல்யாணத் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஏப்.30- ஆம் தேதி சித்ரா பெளா்ணமியையொட்டி, காலையில் நவகலச ஹோமம், சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் மூலவா் சித்ரகுப்தருக்கு நடைபெறுகிறது. மாலையில் கோயில் வளாகத்தில் கா்ணகி அம்பாளுக்கும் சித்ர குப்த சுவாமிக்கும் ஆகம விதிகளின்படி திருக்கல்யாணமும், அதைத் தொடா்ந்து வீதியுலாவும் நடைபெறுகிறது.
மறுநாள் மே. 1-ஆம் தேதி சித்ரா பெளா்ணமியையொட்டி பக்தா்கள் சிறப்பு தரிசனம் செய்யலாம் எனவும் கோயில் செயல் அலுவலா் பா.அலமேலு தெரிவித்துள்ளாா்.
Advertisement