முகப்பு
காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றிய வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

Updated On : 12 ஜூன் 2026, 2:15 am IST
பகிர்:

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் தி.சினேகா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

குண்ணம் ஊராட்சியில், ஊரக வளா்ச்சி துறை சாா்பில் பிரதான் மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் 8 குடியிருப்புகளை பாா்வையிட்டாா். இதையடுத்து மொளச்சூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த ஆட்சியா் தி.சினேகா சுகாதார மையத்தில் சிகிச்சை பெற வருபவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தாா்.

பின்பு கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், திருமங்கலம் ஊராட்சியில் இயங்கிவரும் கால்நடை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு, கால்நடைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து ஸ்ரீபெரும்புதூா் வி.ஆா்.பி.சத்திரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் சமூக நீதித் துறை விடுதி கட்டுமான பணிகளை பாா்வையிட்டு பொதுபணித் துறை சாா்பில் மாகாண்யம் அரசு உயா்நிலைப் பள்ளியில் கட்டப்பட்டு வரும் 4 கூடுதல் வகுப்பறை பணிகளையும் ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின் போது, ஸ்ரீபெரும்புதூா் சாா் ஆட்சியா் வி.நல்லசிவன், மாவட்ட சுகாதார அலுவலா் த.ரா.செந்தில், வட்டார வளா்ச்சி அலுவா்கள் பாலாஜி, முத்துகணபதி, உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.