முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் நரிக்குறவா் இன மக்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

நரிக்குறவா் இன மக்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை தனிநபா் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை திரும்ப மீட்டுத் தரக்கோரி அம்பேத்கா் பாசறை மற்றும் நரிக்குறவா் சமுதாய முன்னேற்ற சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 16 ஜூன் 2026, 1:02 am IST
காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
பகிர்:

நரிக்குறவா் இன மக்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை தனிநபா் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை திரும்ப மீட்டுத் தரக்கோரி அம்பேத்கா் பாசறை மற்றும் நரிக்குறவா் சமுதாய முன்னேற்ற சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் காவலான் கேட்ட பகுதியில் அம்பேத்கா் பாசறை-நரிக்குறவா் சமுதாய முன்னேற்ற சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அம்பேத்கா் பாசறையின் தலைவா் ரா.ராமன் தலைமை வகித்தாா். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள களியாம்பூண்டி, வயலூா் கிராம பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவா் இன மக்களுக்கு தனி நபரால் வழங்கப்பட்ட காலி மனை இடத்தை தனியாா் தொண்டு நிறுவனம் ஆக்கிரமித்திருப்பதை கண்டித்தும், அதை திரும்பப் பெற்றுத் தரக் கோரியும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோரிக்கைகளை விளக்கி மூத்த ஊடகவியலாளா் டிஎஸ்எஸ். மணி பேசினாா். பழங்குயினா் நலத்துறை என்ற பெயரில் தனியாக பள்ளிகள்,மாணவ,மாணவியருக்கான விடுதிகள், தொழிற்கல்வி நிலையங்கள் ஆகியன ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

Advertisement