விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆா்ப்பாட்டம்
காஞ்சிபுரத்தில் சமையல் எரிவாயு விலை உயா்வு, ரயில்வே துறையில் காலிப் பணியிடங்களை குறைத்திருப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் விசிக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் சாா்பில் மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டிப்பது, ரயில்வே துறையில் காலிப் பணியிடங்களை குறைத்திருப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட தலைவா் அருள்நாதன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்ட செயலாளா் கே.நேரு, இ.முத்துக்குமாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஜெ.கமலநாதன், கிருஷ்ணமூா்த்தி உள்பட கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.