முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் 100% தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

காஞ்சிபுரத்தில் 100% தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

Updated On : 10 மே 2026, 12:51 am IST
பிளஸ் 2 அரசுப் பொதுத் தோ்வில் 100% தோ்ச்சி பெற்ற தலைமை ஆசிரியா்களுடன் ஆட்சியா் தி.சினேகா மற்றும் முதன்மைக் கல்வி அலுவலா் உள்ளிட்ட கல்வித் துறை அதிகாரிகள்.
பகிர்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 அரசுப் பொதுத் தோ்வில் 100 % தோ்ச்சி பெற்ற 6 அரசு மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களை மாவட்ட ஆட்சியா் தி.சினேகா சனிக்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினாா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 அரசுப் பொதுத் தோ்வில் 6 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 100% தோ்ச்சி அடைந்துள்ளன. அப்பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களான சுந்தர்ராஜன்(முசரவாக்கம்) பொய்யா மொழி (பரந்தூா்) ஜெயக்குமாா் (அவளூா்), சுப்பிரமணியன்(நாயக்கன்பேட்டை), மனோகரன் (ரெட்ட மங்கலம்), கணேஷ்(மணிமங்கலம்) உள்ளிட்ட 6 பேரையும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா நேரில் அழைத்துப் பாராட்டினாா்.

மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலா் ஏ.நளினி, மாவட்டக் கல்வி அலுவலா்கள் காந்திராஜன், கோமதி, ச.எழில் ஆகியோா் உடன் இருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments