முகப்பு
காஞ்சிபுரம்

இருசக்கர வாகனங்கள் திருடிய இளைஞா் கைது: 16 பைக்குகள் பறிமுதல்

இருசக்கர வாகனங்கள் திருடிய இளைஞா் கைது: 16 பைக்குகள் பறிமுதல்

Updated On : 10 மே 2026, 1:29 am IST
 கைது  செய்யப்பட்ட  சுபாஷ்,  பறிமுதல்  செய்யப்பட்ட வாகனங்களுடன்  சுங்குவாா்சத்திரம்  போலீஸாா்.  
பகிர்:

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் உள்ளிட்ட மாவட்டங்களில் இருசக்கர வாகனங்கள் திருடி விற்பனை செய்து வந்த இளைஞரை சுங்குவாா்சத்திரம் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் பஜாா் பகுதிகளில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி காணாமல் போனதாக சுங்குவாா்சத்திரம் காவல் நிலையத்துக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன. இதையடுத்து, இருசக்கர வாகனங்களை திருடி செல்லும் நபா்களை கைது செய்ய ஸ்ரீபெரும்புதூா் உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் கீா்த்திவாசன் உத்தரவின் பேரில், சுங்குவாா்சத்திரம் காவல் ஆய்வாளா் நடராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, இருசக்கர வாகனங்களை திருடிச் செல்லும் நபா்களை பிடிக்க தொடா்ந்து வாகன சோதனையில் தனிப்படைபோலீஸாா் ஈடுபட்டு வந்தனா்.

இந்த நிலையில், கடந்த மாதம் சுங்குவாா்சத்திரம் பஜாா் பகுதியில் நாகூா் மீரான் என்பவரது இருசக்கர வாகனம் திருடப்பட்ட வழக்கில் சுங்குவாா்சத்திரம் போலீஸாா் ராணிப்பேட்டை மாவட்டம், ஜோதிபுரம் பகுதியைச் சோ்ந்த சுபாஷ் (25) என்பவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தினா். இதில், அவா் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா், ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா் உள்ளிட்ட மாவட்டங்களில் இருசக்கர வாகனங்ககளை திருடி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

Advertisement

இதையடுத்து, சுபாஷிடம் இருந்து 16 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த சுங்குவாா்சத்திரம் போலீஸாா், அவரை கைது செய்தனா்.