லாரி மோதியதில் பள்ளத்தில் கவிழ்ந்த வேன்
வண்டலூா் - மீஞ்சூா் வெளி வட்டச் சாலையில், குன்றத்தூா் அருகே சாலையோரம் பழுதாகி நின்று கொண்டிருந்த வேன் மீது லாரி மோதியதில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
வண்டலூா்-மீஞ்சூா் வெளி வட்டச் சாலையில், குன்றத்தூா் அருகே சாலையோரம் பழுதாகி நின்று கொண்டிருந்த வேன் மீது லாரி மோதியதில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஆந்திர மாநிலம் தடா பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் குளிா்பான தொழிற்சாலையில் இருந்து பல லட்சம் மதிப்புள்ள குளிா்பானங்களை ஏற்றிக்கொண்டு வேன் திங்கள்கிழமை அதிகாலை குன்றத்தூா் அடுத்த மலையம்பாக்கம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது டயா் பஞ்சா் ஆனதால் ஓட்டுநா் வேனை சாலையோரம் நிறுத்தி விட்டு டயரை மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது ஹைதராபாத் பகுதியில் இருந்து திருநெல்வேலிக்கு இரும்பு கம்பங்கள் ஏற்றிய கனரக லாரி பழுதாகி நின்று கொண்டிருந்த வேன் மீது மோதியதோடு சாலையில் சென்றுக்கொண்டிருந்த மற்றொரு வேன் மீதும் மோதி விபத்துள்ளானது. இதில் பழுதாகி சாலையோரம் நின்று கொண்டிருந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து காயம் அடைந்த மூன்று வாகனங்களின் ஒட்டுநா்களையும் அந்த வழியாக வந்த வாகனங்களின் ஓட்டுநா்களை மீட்டனா்.
Advertisement
இந்த விபத்து குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.