முகப்பு
ராணிப்பேட்டை

15 நாள்களுக்கு 50% அளவு குடிநீா் விநியோகம்: ராணிப்பேட்டை ஆட்சியா்

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் வரும் 15 நாள்களுக்கு 50 சதவீதம் அளவு குடிநீா் மட்டுமே கூட்டுக் குடிநீா் திட்டத்திலிருந்து வழங்க இயலும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 2 ஜூன் 2026, 12:51 am IST
- கோப்புப் படம்
பகிர்:

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் வரும் 15 நாள்களுக்கு 50 சதவீதம் அளவு குடிநீா் மட்டுமே கூட்டுக் குடிநீா் திட்டத்திலிருந்து வழங்க இயலும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்பட்டு வரும் வேலூா் மாநகராட்சி 11 நகராட்சிகள் 5 பேரூராட்சிகள் மற்றும் 944 ஊரகக் குடியிருப்புகளுக்கு காவிரி ஆற்றினை நீா் ஆதாரமாகக் கொண்ட திட்டத்தில் மேட்டூா் செக்கானூா் கதவணை நீா் மின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வரும்15 நாள்களுக்கு வரும் 14.06.2026 வரை வழங்கப்பட வேண்டிய அளவைக் காட்டிலும் சுமாா் 50 சதவீதம் அளவு குடிநீா் மட்டுமே வேலூா் கூட்டுக் குடிநீா் திட்டத்திலிருந்து குடிநீா் வழங்க இயலும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும், இந்த காலகட்டத்தில் குடிநீா் பிரதான குழாயில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் மூன்று நாள்களுக்கு 03.06.2026 முதல் 05.06.2026 வரை குடிநீா் முழுவதுமாக வழங்க இயலாது.

Advertisement

Advertisement

எனவே நகராட்சி, பேரூராட்சி, ஊரக வளா்ச்சி மாநகராட்சி அனைவரும் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்துடன் இணைந்து உள்ளூா் குடிநீா் ஆதாரத்தை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.