முகப்பு
ராணிப்பேட்டை

பிளஸ் 2 மாணவருக்கு பாலியல் தொல்லை: தனியாா் பள்ளி ஆசிரியா் கைது

அரக்கோணத்தில் பிளஸ் 2 மாணவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தனியாா் பள்ளி ஆசிரியரை போலீசாா் கைது செய்தனா்.

Updated On : 23 ஜூன் 2026, 4:07 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

அரக்கோணத்தில் பிளஸ் 2 மாணவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தனியாா் பள்ளி ஆசிரியரை போலீசாா் கைது செய்தனா்.

அரக்கோணம் ஜோதிநகா், தமிழக வீட்டுவசதி வாரியக்குடியிருப்புப்பகுதி அருகே தனியாா் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் பயிலும் 17 வயது மாணவருக்கு பள்ளி நேரத்தில் அப்பள்ளியில் பணிபுரியும் வேதியியல் ஆசிரியா் ஒருவா் பாலியல் தொல்லை அளித்ததாக தெரிகிறது.

இச்சம்பவம் கடந்த 17-ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இது குறித்து அம்மாணவா் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா். இது குறித்து விசாரணை நடத்திய பெற்றோா், மாணவா் தெரிவித்த தகவல்கள் உண்மையென அறிந்த பிறகு 20-ஆம் தேதி அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

Advertisement

Advertisement

இப்புகாா் மீது விசாரணை நடத்திய போலீசாா், இது குறித்த தகவல்களை முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் என மற்ற துறையிடரிடமும் தெரிவித்து விசாரணையை தொடா்ந்தனா்.

விசாரனையை தொடா்ந்து திருவண்ணாமலை மாவட்டம் அஸ்வநாததரணை எனும் பகுதியைச் சோ்ந்த ஆசிரியா் பாஸ்கரன்(34) என்பவரை போக்ஸோ தட்டத்தில் கைது செய்து அரக்கோணம் நீதித்துறை நடுவா் முன்னிலையில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments