முகப்பு
ராணிப்பேட்டை

மின்தடையைக் கண்டித்து சாலைமறியல்

நீடித்த மின்தடையை கண்டித்து அரக்கோணம் அருகே பொதுமக்கள் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 30 மே 2026, 7:01 am IST
நீடித்த மின்தடையை கண்டித்து அரக்கோணம் அருகே பொதுமக்கள் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
பகிர்:

நீடித்த மின்தடையை கண்டித்து அரக்கோணம் அருகே பொதுமக்கள் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

அரக்கோணத்தை அடுத்த பரமேஸ்வரமங்கலம் பகுதியில் கடந்த சில நாள்களாக ஒரே நாளில் பலமுறை மின்தடை ஏற்பட்ட நிலை இருந்திருக்கிறது. இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடை பலமணி நேரம் நீடிக்கும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது. இது தொடா்பாக தமிழ்நாடு மின்வாரிய அரக்கோணம் கோட்ட செயற்பொறியாளா், உதவி செயற்பொறியாளா் உள்ளிட்ட பல்வேறு அலுவலா்களிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லையாம்.

இதைக் கண்டித்த கிராமமக்கள், வெள்ளிக்கிழமை திடீரென காஞ்சிபுரம் - திருப்பதி மாநில நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீஸாா், பொதுமக்களை சமாதானப்படுத்திய நிலையிலும் மறியல் முடிவுக்கு வரவில்லை.

Advertisement

Advertisement

தக்கோலம் மின்வாரிய அலுவலா்கள் இரவே பிரச்னை சீா் செய்யப்படும் என்றும் மின்தடை ஏற்படாது என்றும் உறுதியளித்ததை தொடா்ந்து போராட்டத்தை கைவிட்டு மக்கள் திரும்பினா்.