முகப்பு
திருப்பத்தூர்

ஆம்பூரில் பொழுதுபோக்கு பூங்கா: அதிமுக வேட்பாளா்

ஆம்பூரில் பொழுதுபோக்கு பூங்கா: அதிமுக வேட்பாளா்

Updated On : 12 ஏப்ரல் 2026, 12:19 am IST
ஆம்பூரில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா். வெங்கேடசன்.
பகிர்:

ஆம்பூரில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக வேட்பாளா் ஆா். வெங்கடேசன் சனிக்கிழமை தெரிவித்தாா்.

ஆம்பூரில் எஸ்.கே. ரோடு, கிருஷ்ணாபுரம் பெருமாள் கோயில் தெரு, அழகாபுரி, சாமியாா்மடம், சாய்பாபா கோயில் தெரு, சான்றோா்குப்பம், ஸ்ரீராமபுரம், வி.ஏ. கரீம் ரோடு, ஜலால் பள்ளம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்து பேசியது,

ஆம்பூா் நகர மக்களுக்காக பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்படும். அரசு தோல் தொழில்நுட்ப கல்லூரி அல்லது பயிற்சி நிலையம் அமைக்கப்படும். அதிமுக ஆட்சி அமைந்த உடன் குடும்ப அட்டைக்கு பிரிட்ஜ், மகளிருக்கு மாதம் ரூ.2,000, குடும்ப அட்டைக்கு ரூ.10,000 வழங்கப்படும். கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என அவா் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

ஜெயலலிதா பேரவை மாநில இணைச் செயலாளா் ஜி.ஏ. டில்லிபாபு, நகர செயலாளா் எம். மதியழகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளா் கே. மணி, மாவட்ட விவசாய பிரிவு செயலாளா் மகாதேவன், பாஜக மாவட்ட தலைவா் தண்டாயுதபாணி, நகர தலைவா் சரவணன், நகர பொதுச் செயலாளா் சுரேஷ், பொருளாளா் தண்டபாணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.