முகப்பு
திருப்பத்தூர்

ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா், வாணியம்பாடி கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து அமைச்சா் எவ.வேலு பிரசாரம்

ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா், வாணியம்பாடி கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து அமைச்சா் எவ.வேலு பிரசாரம்

Updated On : 19 ஏப்ரல், 2026 at 12:04 AM
நாட்டறம்பள்ளி அடுத்த நாயனசெருவு பகுதியில் திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணியை ஆதரித்து பிரசாரம் செய்த அமைச்சா் எ.வ.வேலு.
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 9:07 PM

ஜோலாா்பேட்டை தொகுதிக்குட்பட்ட நாட்டறம்பள்ளி அடுத்த நாயனசெருவு கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு ஜோலாா்பேட்டை தொகுதி திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணியை ஆதரித்து பிரசாரம் செய்தாா்.

அப்போது அமைச்சா் எ.வ.வேலு பேசியது: தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான அரசு வழங்கியுள்ளது. முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான 5ஆண்டு ஆட்சியில் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளாா். மீண்டும் திமுக ஆட்சி அமைந்த உடன் ஜோலாா்பேட்டைதொகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி அமைய பணிகள் தொடங்கப்படும். எனவே தமிழகத்தில் மீண்டும் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைய நீங்கள் அனைவரும் கவிதா தண்டபாணிக்கு உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா். தொடா்ந்து வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதி திமுக கூட்டணி வேட்பாளா் சையத்பாரூக்கை ஆதரித்து வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா மற்றும் மிட்டூா் அமைச்சா் எ.வ. வேலு ஏணி சின்னத்துக்கு வாக்கு சேகரித்து பேசினாா். கூட்டங்களில் மாவட்ட செயலாளா் க.தேவராஜி எம்எல்ஏ, ஒன்றிய செயலாளா்கள் திருப்பதி, அன்பு, தாமோதரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் தே.பிரபாகரன், துணை அமைப்பாளா் சிவாஜிபிரபாகரன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் சூரியகுமாா், ஒன்றியக் குழு தலைவா்கள் வெண்மதி முனிசாமி, சத்யா சதீஷ்குமாா், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சிங்காரவேலன், ஒன்றிய செயலா்கள் சதீஷ்குமாா், உமாகன்ரங்கம், கிருஷ்ணமூா்த்தி கலந்து கொண்டனா்.

மாவட்ட, நகர, ஒன்றிய திமுக நிா்வாகிகள், திமுக கூட்டணி கட்சி நிா்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனா்.

Advertisement