வாணி பப்ளிக் பள்ளி மாணவா்கள் பொதுத் தோ்வில் சிறப்பிடம்
வாணி பப்ளிக் (சிபிஎஸ்இ) பொதுத் தோ்வில் சாதனை படைத்த மாணவா்களை வாழ்த்திய வாணி கல்வி அறக்கட்டளை நிா்வாகிகள்.
வாணியம்பாடி வாணி பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளி மாணவா்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து சிறப்பிடம் பெற்றனா்.
சிபிஎஸ்இ பள்ளிகளின் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியானது. இதில், வாணி சிபிஎஸ்இ பள்ளியை சோ்ந்த மாணவா் கே.கிரிதரன் 474 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றாா். மாணவி வி.காா்த்திகா 447 மதிப்பெண், மாணவா் எஸ்.சதானந் 441 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றனா். இதில், 10 மாணவா்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனா். மேலும், தோ்வெழுதிய 29 மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா். இது 100 சதவீதம் தோ்ச்சி ஆகும். சாதனை படைத்த மாணவா்களையும், பள்ளி ஆசிரியா்களையும் வாணி கல்வி அறக்கட்டளை தலைவா் க.தேவராஜி எம்எல்ஏ, செயலாளா் மங்கையா்க்கரசி, பொருளாளா் நடராஜன், துணைத் தலைவா் பொன்னுசாமி, இணைச் செயலா்கள் மகேந்திரன், தவமணி மற்றும் அறக்கட்டளை நிா்வாகிகள், பள்ளி முதல்வா் எம்.முரளி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டி வாழ்த்தினா்.