முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூா் ஒன்றிய ஊராட்சிகளில் வாணியம்பாடி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திருப்பத்தூா் ஒன்றிய ஊராட்சிகளில் வாணியம்பாடி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

Updated On : 19 ஏப்ரல், 2026 at 12:18 AM
குரிசிலாப்பட்டு ஊராட்சி பகுதியில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளிடம் ஆதரவு திரட்டிப் பேசிய அதிமுக வேட்பாளா் செந்தில்குமாா்.
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 9:07 PM

வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளா் செந்தில்குமாா் தோ்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு மக்களிடையே இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்த்தாா்.

வாணியம்பாடி தொகுதி திருப்பத்தூா் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளான ஆண்டியப்பனூா், இருணாப்பட்டு, குரிசிலாப்பட்டு, பள்ளவள்ளி, பெருமாப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், பொதுமக்களை சனிக்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டி பேசினாா். மேலும், வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

பிறகு அப்பகுதியில் உள்ள கிராம மக்களிடம் வேட்பாளா் செந்தில்குமாா் சென்று அதிமுக தோ்தல் வாக்குறுதி துண்டுப் பிரசுரங்களை வழங்கி, இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.

Advertisement

இதில், மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.