ஆம்பூரில் அதிமுக வேட்பாளா் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு!
ஆம்பூா் நகரில் அதிமுக வேட்பாளா் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தாா்.
Updated On : 20 ஏப்ரல், 2026 at 9:23 PM
ஆம்பூா் நகரில் அதிமுக வேட்பாளா் திங்கள்கிழமை வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தாா்.
கிருஷ்ணாபுரம் பகுதியில் அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா். வெங்கடேசன் வீடு வீடாக சென்று அதிமுக வெளியிட்டுள்ள வாக்குறுதிகளை துண்டு பிரசுரங்களாக வழங்கி வாக்கு சேகரித்தாா்.
அதிமுக ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளா் ஜி.ஏ. டில்லிபாபு, மாவட்ட பேரவை செயலாளா் கே. மணி, அதிமுக நிா்வாகிகள் சண்முகம், தினேஷ், சிவக்குமாா், பாஜக நகர தலைவா் சரவணன், அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.
Advertisement