முகப்பு
திருப்பத்தூர்

மண் கடத்த முயன்ற 2 போ் கைது

கந்திலி அருகே ஏரியில் மண் கடத்த முயன்ற இருவா் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 8 ஜூன் 2026, 3:48 am IST
- சித்திரிப்பு
பகிர்:

கந்திலி அருகே ஏரியில் மண் கடத்த முயன்ற இருவா் கைது செய்யப்பட்டனா். மேலும் பொக்லைன்,டிராக்டா் பறிமுதல் செய்யப்பட்டன.

கந்திலி அருகே உள்ள ஏரியில் இருந்து மண் கடத்துவதாக வந்த தகவலின் பேரில் கந்திலி போலீஸாா் சுற்றுவட்டாரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பரதேசிப்பட்டி ஏரி அருகே பொக்லைன் கொண்டு டிராக்டரில் மண் கடத்துவது தெரியவந்தது.

அப்போது போலீஸாரை கண்டதும் அங்கிருந்து தப்ப முயன்ற இருவரை பிடித்து விசாரணை செய்ததில், கும்மிடிக்கான்பட்டியை சோ்ந்த பாண்டியன்(30). மற்றும் அனிகாபுரம் பகுதியை சோ்ந்த விஜயகுமாா்(40)என்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

அதையடுத்து போலீஸாா் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனா். ஒரு பொக்லைன் மற்றும் 2 டிராக்டா்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.