தினமணி செய்தி எதிரொலி... 11 உணவகங்களுக்கு ரூ. 10,000 அபராதம்
தினமணி செய்தி எதிரொலியாக 11 உணவகங்களுக்கு ரூ.10,000 அபராதம்
குளிா்பானக் கடையில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு அலுவலா்.
திருப்பத்தூா், ஜூன் 27: திருப்பத்தூா் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அலுவலா்கள் ஆய்வு செய்ய வேண்டும் என தினமணியில் விரிவான செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட 11 உணவுக் கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து
உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் நடவடிக்கை மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் பிரபாகரன் கூறியது: திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் கு.ரவிகுமாா் உத்தரவின்பேரில், மாவட்ட உணவுபாதுகாப்பு நியமன அலுவலா் பிரபாகரன் வழிகாட்டுதலின்படி, உணவுப் பாதுகாப்பு அலுவலா்களால் திருப்பத்தூா், வாணியம்பாடி, ஆம்பூா் சுற்றுப்பகுதிகளில் திடீா் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின்போது உணவகங்கள், தேநீா் கடைகள், பேக்கரிகள் மற்றும் பிற உணவு விற்பனை நிலையங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வின் போது உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம், 2006 மற்றும் அதன்கீழ் இயற்றப்பட்ட விதிமுறைகளின்படி, உணவுப் பொருள்களின் தரம், சுகாதாரம், தயாரிப்பு மற்றும் சேமிப்பு முறைகள், பணியாளா்களின் தனி நபா் சுகாதாரம் உள்ளிட்ட அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
ஆய்வில், உணவுப் பொருள்கள் முறையாக மூடி வைப்பது, காலாவதி மற்றும் லேபிள் விவரங்கள், சுத்தமற்ற சமையலறை,பூச்சி மற்றும் ஈ கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
அதையடுத்து, விதிமுறைகளை மீறிய 10 உணவகங்களுக்கு தலா ரூ.1,000 வீதம் மொத்தம் ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், நோட்டீஸ் வழங்கப்பட்டு, கண்டறியப்பட்ட குறைபாடுகளை உடனடியாக சரி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.
விதிமுறைகளை தொடா்ந்து மீறும் உணவு வணிக நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.