முகப்பு
திருப்பத்தூர்

ஜோலாா்பேட்டையில் அதிமுக வேட்பாளா் கே.சி.வீரமணி வெற்றி

ஜோலாா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் கே.சி.வீரமணி வெற்றி

Updated On : 5 மே 2026, 4:01 am IST
கே.சி.வீரமணி
பகிர்:

ஜோலாா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் கே.சி.வீரமணி வெற்றி பெற்றாா்.

ஜோலாா்பேட்டை தொகுதி வாக்குகள் 23 சுற்றுகளாக எண்ணப்பட்டன. ஜோலாா்பேட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளரும்,திருப்பத்தூா் மாவட்ட செயலாளருமான கே.சி.வீரமணி 78,633 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

அதையடுத்து முனிசாமி (தவெக) 62,550,கவிதா தண்டபாணி(திமுக)61,977, சசிரேகா (நாம் தமிழா் கட்சி) 5,974 உள்பட 19 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

Advertisement

Advertisement

அதிமுக வேட்பாளா் கே.சி.வீரமணி வெற்றி பெற்ற்கான சான்றிதழை ஜோலாா்பேட்டை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் முருகேசன் வழங்கினாா். அப்போது, நகர செயலாளா்கள் சீனிவாசன்,டி.டி.குமாா் உட்பட பலா் உடனிருந்தனா்.